மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலைவாணன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் ஆகியோர் முர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் , இடைநிலை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதிய ,மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் ,காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.