தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படப் வேண்டும்
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்
காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவிக்க வேண்டும்
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சே.நீலகண்டன்,கோ.நாகராஜன், கா.உதுமான் அலி, மா.குமாரவேல், கா.பால்பாண்டி, சோ.நவநீதன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.