பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி வரும் மார்ச் 5ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதற்காக வரும் பிப்.12ஆம் தேதி ஆயத்த மாநாடு நடைபெறும் என்றும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு மார்ச் 24ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.