பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா மதியாஸகேன் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் வயிற்றுவலி, மூச்சுத்திணறலால் ஃப்ளோரா பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார. பின்னர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஃப்ளோரா தனக்கு ரூ.1.50 கோடி வழங்க ஜி.ஜி. மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:ஜி.ஜி ஆஸ்பத்திரி