இயற்கை காப்பு போராளி நம்மாழ்வார் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழக உழவர் முன்னணி சார்பில் சுவாமிமலை அருகே உள்ள கல்விக்குடியில் நடந்தது. தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் திருஞானம் தலைமை வகித்தார். பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தீந்தமிழன், இயற்கை வேளாண்மை உழவர் ரவிச்சந்திரன் , நடராஜன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். நிறைவாக
அனைவருக்கும் கருப்பு கவுணி பொங்கல் வழங்கப்பட்டது. உழவர்கள், இயற்கை ஆர்வலர்கள், பேரியக்க தோழர்கள், மாற்றுக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
