தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர்- 621 70. 2023ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி / பத்தாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.50/- சேர்க்கை கட்டணம்: ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.185/- இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.195/- இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை (Spot Admission) 16.08.2023 அன்று வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர். மின்னஞ்சல்- prlgitiariyalur@gmail.com, அலைபேசி எண்: 9499055877, 04329-228408, அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம், மின்னஞ்சல்- prlgitiandimadam@gmail.com அலைபேசி எண்: 9499055879-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.