தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள உங்கள் ஊரில் உங்களுடன் ஒரு நாள் திட்டப்படி மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தாலுகாவில் ஒரு நாள் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணப்படுவதுடன் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செந்துறை தாலுகாவில் இத்திட்ட முகாமினை நடத்தினர். செந்துறை தாலுகாவில் “உங்கள் ஊரில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின்னர் நல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தார்.
சமைக்கப்பட்ட வாங்கி சோதனையிட்ட கலெக்டர் இன்று அரிசி உப்புமா தானே செய்யவேண்டும். இது பொங்கல்
சாதம் போன்று உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து உப்புமா செய்வதற்கு உடைக்கப்பட்ட அரிசியின் தரத்தை ஆய்வு செய்து அதனை மேம்படுத்தி கோதுமை ரவை போல் அரிசியை அரைத்து உப்புமா செய்யவேண்டும் என்று சத்துணவு அமைப்பாளர்களிடம் ஆலோசனை கூறினார். மேலும் அப்பள்ளிக்கு சமையலுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை ஆய்வு செய்து அதன் உற்பத்தி தேதி காலாவதி தேதி ஆகியவற்றை கேட்டறிந்தார். காலாவதி தேதிக்கு முன் அனைத்து பொருள்களையும் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கினார்.