சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைப்பெற்று வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு, ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் நடைப்பெற்ற சோதனையின் போது , கணக்கில் வராத பணம் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை நிலை குலையச்செய்யும் வகையில், மத்திய அரசு இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது என எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.