Skip to content
Home » பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

  • by Senthil

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ளது பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு.   பள்ளிக்கரணை, பல்லாவரம் ஆகிய இடங்களில் அலுவலகம்  உள்ளது. மேற்கண்ட  3 இடங்களிலும்  இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் சோதனை விரிவடையும் வாய்ப்பு உள்ளது. சோதனையின் முடிவில் கைப்பற்றபட்ட பொருள்கள், எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக தற்போது 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. பூர்விகா கிளைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!