சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளரின் குழும நிறுவனங்களில் இன்று வருமான வரி சோதனை நடக்கிறது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இந்த சோதனை நடக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் மற்றும் வெளிமாநிலங்கள் உள்ளிட்ட60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.சென்னையில் மணலி, அண்ணாநகர் பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.