லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிட்டது. குஜராத் கலவரம் குறித்த உண்மை நிலவரம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த படம் வெளிநாடுகளில் அனுமதிக்கப்பட்டது. மோடி அரசு தான் குஜராத் கலவரத்துக்கு காரணம் என அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் அந்த படம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் பல இடங்களில் அது வெளியிடப்பட்டது. கேரளாவில் அது கம்யூனிஸ்ட் தொண்டர்களால் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று டில்லியில் உள்ள இந்தியாவுக்கான பிபிசி தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.