திருச்சி மாவட்டம் கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (50). அதிமுக பிரமுகர். திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியின் உறவினர். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் தேர்தல் பறக்குபடையினர் இன்று இரவு அன்பரசன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் கட்டுகட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பறக்கும்படையினர் வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித்துறை அன்பரசன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 1 கோடி பணம் யாருடையது என்பது குறித்து பறக்குபடையினரும் வருமானவரித்துறையினரும் அன்பரசனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..