மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி என்ற ஐடி நிறுவனத்தில் திட்ட மேலாளராக ராகேஷ் பணியாற்றி வருகிறார். ஊடகத் துறையில் பெண் நிருபராக கவுரி அனில் சம்பேகர் பணியாற்றி வந்த இவர், சமீப நாட்களாக வேலையின்றி வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனால் இந்த தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராகேஷ், தனது மனைவிகவுரியை சரமாரியாக தாக்கினார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கவுரியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் இறந்தார். மனைவியின் உடலை போலீசுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொலையான கவுரியின் கழுத்தை அறுத்தாார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் இருந்த ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்தார். தொடர்ந்து அந்த சூட்கேசை வீட்டின் குளியலறையில் விட்டு விட்டு தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவின் புனேவுக்கு தப்பிச் சென்றார். ஒரு நாள் கழித்து, தனது மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ராகேஷ், தான் கவுரியை கொன்று விட்டதாகவும் அவரது உடலை சூட்கேசில் அடைத்து குளியலறையில் போட்டு வைத்துள்ளதாகவும் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பெங்களூரு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் குளியலறையில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். ராகேஷ் கூறியபடி, கவுரியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அதன் பின் அந்த உடல் பாகங்களை தடயவியல் குழுவினர் பரிசோதித்தனர். கைப்பற்றப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப பிரச்னையால் கவுரி கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? அல்லது பொருளாதார பிரச்னையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ராகேஷை, புனேவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.