புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி மகேஸ்வரி சண்முகநாதன் , கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலட்சுமி, வடகாடு ஊராட்சிமன்றத்தலைவர் மணிகண்டன்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.