Skip to content

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை…

  • by Authour

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர மாநில விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் – ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இந்த பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட்டில் விதைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். ராக்கெட்டை அனுப்பிய 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

error: Content is protected !!