Skip to content

ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துவக்கியது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியை சின்னாபின்னாமாக்கிய இந்த தாக்குதலில் சுமார் 12 ஆயிரம் பாலஸ்தீனத்தினர் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்) எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ போன்ற திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெதன்யாகு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.  இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தலைவர்களை காசாமுனை மட்டுமின்றி உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுமாறு பெஞ்சமின் தெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொசாட் உளவு அமைப்பு தயாரித்துள்ள பட்டியலில், இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இஸ்மாயில் ஹனியே (60)பாலஸ்தீன முன்னாள் பிரதமர் (2006)ஆவார். இவர் ஹமாஸ் பொலிட் பீரோதலைவராக 2017-ல் தேர்வானார். இப்போது தாமாக முன்வந்து வெளிநாடுகளில் (கத்தார், துருக்கி) வசிக்கிறார். முகம்மது டெய்ப் என்பவர் ஹமாஸ் ராணுவ பிரிவு தலைவர். இவர்தான் இஸ்ரேலின் முதல் எதிரி. இவரை கொலை செய்ய இஸ்ரேல் 6 முறை முயற்சி செய்துள்ளது. இவர் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. யாயா சின்வார் (61) இஸ்டைன் அல்-காசம் பிரிகேட்ஸ் (ஹமாஸ் ராணுவம்) முன்னாள் கமாண்டர் ஆவார். இவர் 2017-ல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவராக தேர்வானார். 23 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்த இவர், கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் கிீழ் 2011-ல் வெளியில் வந்தார். காலித் மஷால் என்பவர் ஹமாஸ் அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். இவர் இப்போது கத்தாரில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 1997-ல் ஜோர்டானில் இருந்த இவரை கொலை செய்ய மொசாட் முகவர்கள் கனடா சுற்றுலாப் பயணிகள் போர்வையில் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!