கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
ரபாவில் தரைவழித் தாக்குதலைத் துவங்க வேண்டாம் என எகிப்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் ஈரான் எச்சரிக்கையை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. ரபா நகரில் தரைவழித் தாக்குதலை துவக்க இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது.