இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை முன்னிட்டு 24ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இதுவரை 27 நாட்கள் நோன்பு கடைப்பிடித்து உள்ள சூழலில், 27வது நோன்பானது இஸ்லாமியர்களின் புனித இரவாக கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், லைலத்துல் கதர் இரவு என்று அழைக்கப்படும் இந்த புனித இரவை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கும்பகோணம் மேலக்காவேரியில் உள்ள முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் இரவு ஒன்று கூடி சிறப்பு
தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்திய நிலையில், உலக நன்மைக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.