Skip to content
Home » வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

  • by Authour

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.  இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷனும் விராட் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர்.

இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியினருடன் இணைந்துள்ளார்.   இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.. இந்தபோட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார். . அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது.126 பந்துகளில்  இஷான் கிஷன் 200 ரன்களை சேர்த்தார். இதனால் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இவரது இரட்டை சதத்தில் 9 சிக்சர், 23 பவுண்டரிகள்  அடங்கும். கிஷான் அதிரடியை பார்த்த வங்கதேச  வீரர்களுக்கும்ம், ரசிகர்களுக்கும் கிலிபிடித்தது.

கிஷன் இது5வரை  93 ரன்கள் தான் அதிகபட்சமாக எடுத்திருந்தார். இன்று இரட்டை சதத்தை எட்டினார். தொடாந்து ஆடிய அவர்  130 பந்துகளில் 210 ரன் எடுத்திருந்தபோது ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கினார். அது பவுண்டரியில் நின்றிருந்த லிட்டன் தாஸ் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் கிஷன் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 35.5 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 78 பந்துகளில் 91 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார்.  கிஷனுக்கு பதில் ஸ்ரேயஸ் அய்யர் இறங்கினார். தொடர்ந்து இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை சேர்த்து ஆடிக்கொண்டிருக்கிறது. பின்னர்  விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களில்அவுட் ஆனார்.

அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்ரேயஷ் அய்யர்  3 ரன்களை நடையை கட்டினார். கே. எல். ராகுல் 8 ரன்களிலும், அக்சர்பட்டேல் 20 ரன்களிலும்  பெவிலியன் திரும்பினர். அப்போது இந்தியா  48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 398 ரன்களை சேர்ந்தது.

வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகூரும், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர்  37 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  சர்துல் தாகூருடன்  குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார்.  பின்னர்  சர்துல் தாகூர் 3 ரன்களுடன்  ஆட்டம் இழந்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா  8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை சேர்த்தது,  இதன் மூலம் 2 தோல்விகளுக்கும்சேர்த்து  மூட்டைகட்டி இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் 2 தோல்விகளையும் எளிதில் மறக்கும் நிலையில் இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுவரை இந்திய வீரர்கள் சச்சின், சேவாக் ரோகித் ஆகியோர் ஒன்டேவில் இரட்டை சதம் விளாசி உள்ளனர். இப்போது  அதில் கிஷானும் இடம்பெற்றார். உலக அளவில் மிகவும் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர்கள் என்ற பெருமையையும் பெற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *