கோவை ஈஷாவில் என்ன நடக்கிறது என விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. கோவை பேராசிரியர் காமராஜ், தனது 2 மகள்களை ஈஷா மையம் மூளை சலவை செய்து விட்டது. மகள்களை மீட்க வேண்டும் என தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று ஈஷா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்ததுடன், அந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கே மாற்றியது. அதுவரை ஈஷாவில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் 15ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்றும் உத்தரவிட்டது. இதுவரை உள்ள நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.