தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை நாளை(11ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். தமிழக கவர்கள் ஆர்.என்.ரவி, பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதன்பின் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.