கொழும்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி போரில் உயிரிழந்துவிட்டார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முனைகின்றனர், இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல்.உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா”என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.