கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(53). இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்ரியா நேற்று மாலை ஐஏஸ் ஏசி செந்தில்குமாரை அழைத்து கட்டாய விடுப்பில் செல்லுமாறு கூறி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுவதாவது.. திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டடேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தயாளன் மற்றும் எஸ்ஐ சட்டநாதன் ஆகியோர் அதிரடியமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஸ்பாக்கள் இயங்கி வந்தாகவும் இது தொடர்பாக டிஜிபி அலுலகத்திற்கு சென்ற புகார்களின் அடிப்படையில் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு தரப்பினரும்…. இல்லை என்எஸ்பி ரோட்டில் இடவிவகாரம் தொடர்பாக போலீசார் தலையிட்டதன் அடிப்படையில் டிஜிபி அலுவலகத்தின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இது போன்ற தகவல்களை தனது கவனத்திற்கு ஐஎஸ் உதவி கமிஷனர் செந்தில்குமார் கொண்டு வரவில்லை என்கிற கோபத்தின் அடிப்படையில் நேற்று மாலை ஏசி செந்தில்குமாரை அழைத்த கமிஷனர் சத்யப்ரியா முதலில் ஆயுதப்படைக்கு செல்லுமாறு கூறியதாகவும் பின்னர் கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
