பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இருநூறுக்கும் மேற்ப் பட்டோரை பரிசோதனைச் செய்தனர். இதில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ இலவசமாக பார்க்கப் பட்டது. மாத்திரைகள் இலவசமாக வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாட்டினை பாசமலர் வெல்பேர் அசோசியேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
