தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் விடுதியில் இருந்து மாணவி வெளியே சென்று உள்ளார். பின்னர் மாணவி விடுதிக்கு திரும்பவில்லை. தினமும் மாணவியிடம் பேசும் தந்தை 27 ந்தேதி மாணவியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் மாணவியின் தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இது குறித்து விடுதி காப்பாளரிடம் மாணவியின் தந்தை கேட்டுள்ளார். அப்போது விடுதி காப்பாளர் தரப்பில் வெளியே சென்ற மாணவி பின்னர் விடுதி திரும்பவில்லை என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். எங்கும் கிடைக்காத நிலையில் நேற்று சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….
- by Authour
