சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. பாஜக தூண்டுதலால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தெரிந்தே அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பி இருந்தது என அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்த பாலமுருகன் என்ற அதிகாரி, ஜனாதிபதி முர்முவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி இருந்தார்.
ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் நாளையுடன் 60 வயது பூர்த்தி அடைந்து ஓய்வு பெற இருந்தார்.இந்த நிலையில் அவரை இன்று சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய மந்திரி நிர்மலாவின் தூண்டுதலின் பேரில் , பாலமுருகனை பழிவாங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.