இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து துவங்கியதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… இரும்பு யுகத்தின் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டில் பங்களிப்புகள், நமது தேசம் முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையைப் பிரதிப்பலிக்கின்றன. தமிழ்நாட்டில் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாட்டை வௌிப்படுத்துகின்றன என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.