தமிழகத்தில் புகழ்பெற்ற யூடியூபராக இருப்பவர் இர்பான். பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு பிரபலமாக இருக்கும் உணவுகளை சுவைத்து அதைப்பற்றி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் இர்பான். இவரது வீடியோக்களை பார்த்தால் நமக்கே எச்சில் ஊறும், அந்த அளவுக்கு உணவை ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டு ரிவ்யூ செய்வது தான் இர்பான் ஸ்பெஷல். இவருக்கு யூடியூப்பில் 37 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர் கடந்த மார்ச் மாதம் காஷ்மீருக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அங்குள்ள ஓட்டலில் லியோ படக்குழுவுடன் இர்பான் இருந்ததை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், ஒருவேளை இவரும் லியோவில் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வந்தனர். இவர்தான் படத்தில் மிகப்பெரிய டுவிஸ்ட் என்று கூறி அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதன்பின் அந்த பயணம் குறித்து வாய்த்திறக்காமல் இருந்து வந்தார் இர்பான்.
இந்நிலையில், தற்போது 7 மாதங்கள் கழித்து லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, அந்த சந்திப்பு எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இர்பான். சிறு வயதில் இருந்தே விஜய்யின் படங்களை பார்த்து வளர்ந்த தனக்கு அந்த தருணம் தன் வாழ்நாளில் மறக்க முடியாதது என்பதனால் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை ஒரு டைரியில் எழுதி பொக்கிஷமாக வைத்துள்ளதாக கூறினார்.
விஜய்யை பார்த்தது மட்டுமின்றி அவர் நடித்ததையும் நேரில் பார்த்ததாக கூறிய இர்பான். அவரை போட்டோ கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இருந்த தன்னை அழைத்து தோள்மேல் கைபோட்டு அவரே போட்டோ எடுக்க சொன்னார். அந்த தருணத்தில் உற்சாகம் பொங்க தான் சிரித்தபோது எடுத்த போட்டோ தான் இது. மேலும் விஜய் என்னிடம் நான் உங்க வீடியோ பார்த்திருக்கேன் என சொன்னதை கேட்டபோது ஆஸ்கர் வாங்குன பீலிங்கா தான் இருந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார் இர்பான். மேலும் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதையும் கூறி இருக்கிறார் இர்பான். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாமல் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இர்பான் எப்படி அங்கு இருக்கிறார். சமூகவலைதளங்களில் லியோவில் யூடிபர் இர்பான் விஜய் உடன் நடித்திருக்கிறாரோ ..என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது படம் வௌியானவுடன் தான் தெரிய வரும் இது உண்மையாகவே நடித்திருக்கிறா என்பது குறித்து தெரிய வரும்.