இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தலைமையக ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பாலநாக தேவி, காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ஆயுதப்படை ஏடிஜிபியாக இருக்கும் ஹெச்.எம்.ஜெயராம், சென்னை காவல் துறை செயல்பாட்டு பிரிவு ஏடிஜிபி பணியினை கூடுதலாக கவனிப்பார்… என தெரிவிக்கப்பட்டுள்ளது.