Skip to content
Home » தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி.

சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம்.

விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.
ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம்.

மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம்.

தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.

காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.

சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்ற்றம்.

விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.

அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம்.

கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம்.

ஐஜி ஆர் தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜியாக பதவி உயர்வு; மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்.

ஐபிஎஸ் அதிகாரி வி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு; சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.

டிஐஜி சாமூண்டிஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமூண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்.

ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் – செயலாளராக நியமனம்.

ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.

ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.

ஐஜியா பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம்.

சரஜோகுமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.

சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம்.

பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம்.

காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம்.

ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *