இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் போலீஸ் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் போலீஸ் கமிஷனரா இருந்த நஜ்மல் ஹோடா ஐபிஎஸ் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுகிறார். சென்னை ரயில்வே காவல் துறை டிஐஜியாக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவடி சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.