இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு… சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த தீபா சத்யன் சென்னையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். சென்னைப் பெருநகர காவல் துறை கொளத்தூர் காவல் மாவட்டம் துணை ஆணையர் ராஜராம், கடலூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். கட்டாய காத்திருப்புப் பட்டியலில் உள்ள எஸ்பி ரவளி பிரியா, தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்பியாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.