Skip to content

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் மைதானம்  நிரம்பி வழிந்தது. அந்த போட்டி யில் சென்னை அணி மயிரிழையில் வெற்றி பெற்றது.

2வது  போட்டி கடந்த  28ம் தேதி சேப்பாக்கம் மைதானத்திலேயே நடந்தது. இதில் பெங்களூரு  அணியை(RCB) சந்தித்த  சென்னை அணி, பரிதாபமாக தோல்வி அடைந்தது.  அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு  RCB   சென்னையை  வெற்றி கண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து  சிஎஸ்கே  ரசிகர்களே, (பிரகாஷ் ராஜின் வசனம்)  ‘முத்துப்பாண்டி கோட்டை’   என்று சொன்னீங்க  அங்கேயே  வந்து ஆர்சிபி  வச்சான் பாரு ஆப்பு என  கமெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று  சென்னை அணியின் 3வது போட்டி குவகாத்தியில் ராஜஸ்தான் ராயல்சுடன்  நடந்தது.  இதிலும்  சென்னை அணி தோல்வியையே சந்தித்தது.  ஏற்கனவே பெங்களூருவுடன் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சென்னை, நேற்று 6 ரன்கள் வித்தியாசத்திலேயே தோற்றது.

கேப்டன் ருதுராஜ் மட்டும் 63 ரன்கள் அடித்து அவுட் ஆனார் மற்றவர்கள்  சொற்ப ரன்களையே சேர்த்தனர்.  டோனி கூட 11 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்து  பெவிலியன் திரும்பினார்.

டோனியும்,  கடைசியாக  களத்தில் நின்ற  ஓவர்டனும்  கவனமாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.  ஓவர்டன் ஜடேஜா 22 பந்துகளில் 32 ரன்களுடனும், ஓவர்டன் 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். டோனி, ஓவர்டன், ஜடேஜா ஆகியோர் கடைசி நேரத்தில்   கவனம் செலுத்தி ஆடியிருந்தால்,  தோல்வியை தவிர்த்திருக்கலாம்.

தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா இதுவரை  சரியான தொடக்கம் கொடுக்காதது பெரிய ஏமாற்றம்.  ஆனால் நேற்று கேப்டன் ருதுராஜ்  மட்டும் பொறுப்புடன் ஆடியும்   தோல்வியை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையிலும் அசாம் குவகாத்தி மைதானம்  சிஎஸ்கே  ஜெர்சியாகத்தான் தென்பட்டது. ஆட்ட முடிவில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தபடி சென்றனர்.

இன்று மும்பை வான்கடே மைதான்தில் நடைபெறும் போட்டியில்  மும்பையும்,  கொல்கத்தாவும் மோதுகிறது. மும்பை  இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.  இன்றைய போட்டியில்  மும்பை தனது  சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

error: Content is protected !!