மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின .
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 43 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கொல்கத்தாவுக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி என்பதால், மைனஸ் நிகர ரன்ரேட்டில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 2 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது.
வான்ஹடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி, அதில் 10வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. எந்தவொரு அணிக்கு எதிராகவும் ஒரே மைதானத்தில் 10 வெற்றியை எந்த அணியும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யவில்லை.
கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் 2 தோல்விகள் மோசமானதாக அமைந்ததால் நிகர ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி கடைசி இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணி மட்டுமே 2 வெற்றிகளுடன் உள்ளன. இனிமேல்தான் ஒவ்வோர் ஆட்டத்திலும் சூடு பிடிக்கும்.
மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தது அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார்தான். 23 வயதான இவர், ஐபிஎல் அறிமுகத்திலேயே 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் அறிமுக ஆட்டத்தில் அமித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அஸ்வனி குமார் அவரின் சாதனையை முறியடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
பேட்டிங்கில் குறைவான ஸ்கோர் என்பதால், கடந்த 2 போட்டிகளிலும் ஃபார்மின்றி தவித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் ரெக்கில்டன் இந்தப் போட்டியில் வெளுத்து வாங்கி, அரைசதம் அடித்து 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூரியகுமார் யாதவ் தனக்குரிய ஸ்டைலில் 9 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டம், ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய கடின உழைப்பு, கடவுளின் அருளால் இங்கு வந்தேன். என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பதற்றமாகவும் இருந்தது” என்றார்.
என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருந்ததால் மதியம் சாப்பிடவே இல்லை “ஆனால் அனைவரும் பெருமைப்படும் வகையில் வெற்றி கிடைக்க உழைத்துவிட்டேன்” என்றார்.