-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர்2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது.ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி12 போட்டிகளில் விளையாடி 4 மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகளே உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பில்லை.
ஏற்கனவே மும்பை இந்தியன் அணி ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளது. ஆனால் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கே செல்ல முடியாத நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளது.