Skip to content

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா இரு புள்ளிகள் பெற்று உள்ளன.

எனவே இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும்  ஏற்கனவே 33 ஆட்டங்களில் ஆடி  21ல் சென்னையும், 11ல பெங்களூருவும் வென்று உள்ளது.

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில்  எஸ்ஆர்எச் அணியை  லக்னோ வெற்றி பெற்றது. முதலில் ஆடிய எஸ்ஆர்எச் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. வழக்கமாக எஸ்ஆர்எச் முதலில் பேட் செய்தால் 250 ரன்களை சாதாரணமாக  குவித்து விடும். ஆனால் நேற்று லக்னோவிடம், எஸ்.ஆர். எச்சின் வேகம் எடுபடவில்லை.

பின்னர் பேட் செய்த லக்னோ  16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்து எளிதாக வெற்றியை பெற்றது. இதன் மூலம் லக்னோ தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. எஸ்.ஆர். எச். ஆடிய 2 ஆட்டங்களில் ஒரு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது.

error: Content is protected !!