Skip to content

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்- கொல்கத்தா கேப்டன் ரகானே பேட்டி

ஐபிஎல் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் நேற்று  பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நடந்தது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதில் மோதின.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியில் பேட்டிங்கை தொடங்கியது.

கொல்கத்தாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆட்டம் நகர நகர இருக்கையின் நுனியில் முடிவு அமரவைத்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி முடிவில் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்து, அதை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்தது. இந்த ஆட்டத்தில் அதே பஞ்சாப் அணி குறைந்த ஸ்கோரை எடுத்து டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது இதுதான் ஐபிஎல் தொடரின்  சிறப்பு என  ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த  இலக்கை கூட எட்ட முடியாமல் தோற்பது இது தான் முதல் முறை.  இதற்கு முன் 2009ம் ஆண்டு  பஞ்சாபுக்கு எதிராக  சென்னை அணி  117 ரன்னை இலக்காக  நிர்ணயித்தது.  அதில் 24 ரன்னில் பஞ்சாப் வென்றது குறிப்பிடத்தக்கது.  16 ஆண்டுகளுக்கு பின்னர் 112 ரன்னை இலக்காக நிர்ணயித்த  பஞ்சாப்  16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சஹல் வீசிய 8வது ஓவரில்தான் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது. சஹல் வீசிய ஓவரில்  ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே ஆட்டமிழந்தவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது, களநடுவர் தவறான முடிவை வழங்கினார் என ரீப்ளேயில் தெரிந்தநிலையில், ரகானே டிஆர்எஸ் அப்பீல் செய்யாமல் வெளியேறினார். இந்த தருணத்தை சஹல் பயன்படுத்தி ஆட்டத்தை வசப்படுத்தினார். நிதானமாக ஆடிய ரகுவன்சி 37 ரன்களில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சஹலின் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைவாகவும் பந்துவீச்சில் வேகத்தை மாற்றி அமைத்து வேரியேஷனோடு வீசியதால், பேட்டர்கள் ஆடுவதற்கு சிரமப்பட்டனர். இதனால் ரிங்குசிங் (2) ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டா், ராமன்தீப் சிங் வந்தவேகத்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர்(7)  மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெளியேறினார்.

62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 14 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை   இழந்து இக்கட்டான நிலையை அடைந்தது. வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்த கொல்கத்தா அணியினருக்கு இந்த நிலைமை பதற்றத்தை அளித்தது.

கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்கால் இருந்ததால் அந்த அணிக்கு நம்பிக்கை சற்று உயிருடன் இருந்தது. ரஸ்ஸல் கடந்த 25 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 92 ஆக இருந்ததால் எவ்வாறு பேட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்சித் ராணா 3 ரன்னில் யான்சென் பந்தில் க்ளீன் போல்டானார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை, 2 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. சஹல் வீசிய ஓவரில் ரஸ்ஸல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் வைபவ் அரோரா இருந்தார், அரோராவை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அர்ஷ்தீப் வீழ்த்தினார்.

15வது ஓவரை யான்சென் வீசினார், முதல் பந்தை ஆப்சைடு விலக்கி வீசவே அதை கிராஸ்பேட் மூலம் சிக்ஸருக்கு ரஸல் அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார். 17 ரன்னில் ரஸல் ஆட்டமிழக்கவே பஞ்சாப் அணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

தோல்வி அடைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே கூறுகையில், “இந்த தோல்விக்கு நான்தான் காரணம். தவறான ஷாட்களை ஆடமுற்பட்டு ஆட்டமிழந்தேன். இதிலிருந்துதான் சரிவு தொடங்கியது. அந்த நேரத்தில் நான் டிஆர்எஸ் எடுத்திருக்க வேண்டும் தவறவிட்டேன். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது, 111 ரன்கள் சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் நாங்கள் மோசமாக பேட் செய்தோம் என ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த பஞ்சாபை குறைந்த ரன்னில் சுருட்டியது பாராட்டுக்குரியது. நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம், அணியாக தோல்விக்கு பொறுப்பேற்கிறோம். பல விஷயங்கள் என் தலைக்கு மேல் இருக்கிறது, வேதனையாக இருக்கிறது இந்த தோல்வி, நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டு, வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று  8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.

 

error: Content is protected !!