Skip to content

நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்…ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..?..

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி – சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார். இதனால் அதிருப்திக்குள்ளான டோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பதிரானா வீசினார்.

இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பதிரானா பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் டோனிக்கு விதிக்கப்பட்டது. இப்போது வரும் மே 28-ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!