கொல்கத்தா- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா2 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.நிதிஷ்குமார் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்க்ரம் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஷபாஷ் அஹ்மது 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் க்ளாசென். உனத்கட் 4 ரன்களில் அவுட் ஆனார். கடைசிவரை போராடிய பேட் கம்மின்ஸ் 24 ரன்களுக்கு அவுட் ஆக ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் கோல்கட்டா அணிக்கு 114 ரன்கள் இலக்க நிர்ணயித்தது ஐதராபாத் அணி. கொல்கத்தா அணியின் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும் ராணா மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஐபிஎல் இறுதி போட்டியில் 120 பந்துகளை முழுமையாக ஆடாமல் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 113 ரன்கள் ( குறைந்த பட்ச ரன் ) ஆட்டம் இழந்தது ‘சன் ரைசர்’ அணி. 114 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் அடுத்து களமிறங்கியகொலகத்தா அணி 10.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி(2012, 2014 மற்றும் 2024) 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கொலக்த்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் அரைசதம்(52) அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். குர்பாஷ் 39 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் இது வரை சாம்பியன்..
2008 ராஜஸ்தான்
2009 டெக்கான்
2010 சென்னை
2011 சென்னை
2012 கொல்கத்தா
2013 மும்பை
2014 கொல்கத்தா
2015 மும்பை
2016 ஹைதராபாத்
2017 மும்பை
2018 சென்னை
2019 மும்பை
2020 மும்பை
2021 சென்னை
2022 குஜராத்
2023 சென்னை
2024 கொல்கத்தா.