Skip to content

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 34, ராகுல் 38, அபிஷேக் போரெல் 49 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய டெல்லி பவுலர் ஸ்டார்க் 8 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இரண்டு அணிகளின் ரன்களும் சமமாக இருந்ததால் போட்டி  சூப்பர் ஓவருக்கு சென்றது. இதனால் ஆட்டத்தின் முடிவை அறியும்  பரபரப்பு ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. அந்த ஓவரை  டெல்லி தரப்பில் ஸ்டார்க் வீசினார். 0, 4, 1, 4 (நோ-பால்), ரன் அவுட், ரன் அவுட் என அமைந்தது.

12 ரன்கள் எடுத்தால் வெற்றி என சூப்பர் ஓவரில் ஆடியது டெல்லி. கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அந்த ஓவரில் விளையாடினர். சந்தீப் சர்மா ஓவரை வீசினார். 2, 4, 1, 6 என விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது டெல்லி அணி.

கடந்த 2022-ம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் சூப்பர் ஓவராக இது அமைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாக 15 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!