நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்மோதின.
டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்சை தொடங்கினர்.
வெற்றி பெற 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டில்லி ஓப்பனர்கள் ஜேக் ப்ரேசர், டு ப்ளெஸ்சிஸ் களமிறங்கினர். இதில் ஜேக் ப்ரேசர் ஒரே ஒரு ரன்னில் வெளியேறினார். டு ப்ளெஸ்சிஸ் 29 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் பொரேல் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். சமீர் ரிஸ்வி 4, அக்சர் படேல் 22 என தடுமாற்றத்துடன் தொடங்கிய அணியை, ஸ்டப்ஸ் (34), அஷுதோஷ் சர்மா (66), விப்ராஜ் நிகாம் (39) ஆகியோர் தூக்கி நிறுத்தினர். இதில் அஷுதோஷ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இப்படியாக 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து டில்லி வெற்றி பெற்றது .