2025 ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்தார்.
நூர் அகமது வீசிய இன்னிங்ஸின் 13-வது ஓவரில் ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மாவை வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் நமன் 17 ரன்கள், சான்ட்னர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. போல்ட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தீபக் சஹார் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.
அடுத்து 156 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி பேட்டிங் செய்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா கடைசி வரை அவுட் ஆகாமல் 65 ரன்கள் குவித்தார். ஆனால் மறுபக்கம் ஆடிய ராகுல் வெறும் இரண்டு ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்கள் விளாசி அசத்தினார். சிவம் டூபே 9 ரன்கள், தீபக் ஹூடா 3, சாம் கர்ரன் 4, ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்தபடியாக அரங்கம் அதிர தோனி களமிறங்கினாலும் ரன்கள் எதுவும் அவர் எடுக்கவில்லை. 6 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதியாக ஒரு சூப்பர் சிக்சரை அடித்து ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்து சென்றார் ரச்சின் ரவீந்திரா. 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே.
ஆட்ட நாயகனாக 4 விக்கெட் வீழ்த்திய நுர் அமகது தேர்வு செயயப்பட்டார்.
முன்னதாக ஐதராபத்தில் நடந்த இன்னொரு போட்டியில் ஐதராபாத் எஸ்ஆர் எச் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.
இன்று இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லியும், லக்னோவும் மோதுகிறது.