16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் இறங்குகிறது. அதே வேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ் டோனி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
