நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எஸ்ஆர்எச் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்த்தா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த எஸ்.ஆர். எச் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களே எடுத்தது. இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் தோல்வி அடைந்தது. இந்த சீசனில் மிக மோசமான தோல்வியை ஜதராபாத் அணி பெற்றுள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 3 ஆட்டங்களில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பேட்டிங் பலமாக உள்ளது. நிகோலஸ் பூரண் 3 ஆட்டங்களில் 189 ரன்களை விளாசி நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷும் இரு அரை சதங்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். பேட்டிங்கில் பலமாக இருக்கும் லக்னோ அணி பந்து வீச்சில் பலவீனமாக உள்ளது. ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய் ஆகியோரை மட்டுமே பந்து வீச்சில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நாளை(சனி) 2 போட்டிகள் நடக்கிறது. 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை அணியும், டில்லியும் மோதுகிறது. சென்னை இதுவரை 1 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. டில்லி 2 ஆட்டத்தில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். சென்னையின் ஆட்டம் இந்த சீசனில் குறிப்பிடும்படியாக இல்லை.