ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலமாகவே, இந்த டி10 தொடர்களும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்தத் தொடர் தற்போது இந்தியாவிலும் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர். இந்த வரிசையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் குறித்த விவரம் மட்டும் வெளியாகாமல் உள்ளது. சூர்யாவின் இந்த புது அவதாரத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.