ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. நேற்றைய தினம் 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், க்ளன் பிலிப்ஸ் மற்றும் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், ரஹானே, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. வெஸ்ன் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை 1.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. ஃபாப் டு பிளசிஸை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆர்சிபியிடம் ஆர்டிஎம் வாய்ப்பு இருந்தும் டு பிளசிஸை வாங்க அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட சேம் கரணை சிஎஸ்கே நிர்வாகம் ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சனுக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டிப்போட்டது. முடிவில் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல்-ஐ வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக ஆடிய க்ருணால் பாண்டியாவை ஆர்சிபி ரூ.5.75 கோடிக்கு வாங்கியது. அவரை வாங்க ராஜஸ்தான் அணி போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ராணாவை 4.20 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது