10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெற்றது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.
பவுலர் முகமது ஷமியை ஐதராபாத் அணி ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரிஷப் பந்த்தை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் என்ற பெருமை ரிஷப் பன்ட்டுக்கு கிடைத்தது. இவரது ஆரம்ப தொகையாக ரூ.2 கோடி இருந்தது. அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க டில்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி அணி இவரை ஏலம் எடுத்தது. தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவை ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. சர்வதேச ‘டி-20’ போட்டியில் 96 விக்கெட் சாய்த்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதல் நபராக ஏலத்திற்கு வந்தார். இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி ‘ரைட் டு மேட்ச்’ கார்டை பயன்படுத்தி தக்க வைத்தது. யுவேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதேபோல் லக்னோ அணி ரூ.7.50 கோடிக்கு டேவிட் மில்லரை ஏலத்தில் எடுத்தது. ஐதராபாத் அணி ரூ.10 கோடிக்கு முகமது ஷமியை ஏலத்தில் எடுத்தது.