திருச்சி – திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் கூடிய ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் -ல் இன்று அதிகாலை மரும நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை எதார்த்தமாக பணம் எடுக்க சென்ற நபர் ஏடிஎம் ஐ பார்த்தபொழுது
ஏடிஎம் மெஷின் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது இதனை அடுத்து பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் வங்கிக்கு தகவல் கொடுத்ததன் பெயரில்
ஐஓபி மேனேஜர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்றவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.