Skip to content
Home » பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;

ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme –NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள்  https://overseas.tribal.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் – 31.05.2024.  மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ இணையதளத்தை பார்வையிடலாம்.  மேலும் இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகள் (Nodal officers) இத்தகவலை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்திடவும் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!