சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் கோவை ரோடு என்.எஸ்,ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.